மட்டு. மாவட்ட பட்டதாரிகளின் கோரிக்கை நியாயமானது என அரச தலைவர்களிடம் எடுத்துரைப்பேன் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

(படுவன் பாலகன்)
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஆறு நாட்களாக தமக்கு தொழில் நியமனங்களை வழங்கக்கோரி மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நியயமானது, இவர்களுடைய கோரிக்கையினை ஜனாதியதியும் பிரதமரும் கவணத்திலெடுத்து உடன் அதற்கான பதிலினை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்திப் பூங்கவுக்கு முன்னால், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளை  இன்று ஞாயிற்றுக்கிழமை (26ஆம் திகதி பிற்பகல்) நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு இராஜாங்க அமைச்சர்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், பல்வேறுபட்ட  சிரமங்களுக்கு மத்தியிலும் இவர்கள் கல்வியினைக் கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்பினை நிறைவுசெய்து பல காலமாகியும் இவர்களுக்கு அரச தொழில் கிடைக்காதது ஒரு துர்ப்பாக்கிய நிலை.  
இவர்களுக்கான தொழில் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால்தான் இவர்கள் தமக்கு வேலைவாய்வினை வழக்குமாறு கோரிநிற்கின்றனர். 

இப் போராட்டம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடைபெற்றுவருவதனை காணக்கூடியதாகவுள்ளது. இங்கு பலர் வெகு தூரங்களிலிருந்தும் பலர் கைக்குழந்தைகளுடனும் வந்து தமது கோரிக்கையினை முன்வைக்கின்றனர்.


இது விடயமாக நான் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கலந்துரையாடி இந்த சத்தியாக்கிரக்கப் போரட்டத்திற்கு நல்லதோர் முடிவு கிடைக்கும்படியாக இங்குள்ள நிலமைகளை விளக்கிச் செல்வேன். எனவும் அவர் தெரிவித்தார்.