மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு

(விஷேட நிருபர்)
புதன்கிழமை (22.02.2017) இரவு 8 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடனடியாக  அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுதாவளை கடற்கரை  வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு நபர்கள், பேச வேண்டும் என கூறி அழைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அதிகாரியொருவர் சுடப்பட்ட இந்த சம்பவமானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை முன்னெடுக்கும் போலீஸ் தரப்பு தகவல்களின் படி துப்பாக்கிதாரிகளோ அல்லது அதற்கான பின்னனியோ இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.