மண்டூர் மதிதயன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இரு வருடங்களாகிறது இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

மண்டூரில் சமூக  சேவை  உத்தியோகத்தரான   மதிதயன்   சுட்டுக்கொலை செய்யப்பட்டு   இதுவரை  இன்னும் ஒருவரை கூட நீதிமன்றத்திற்கு பொலிசார்  கொண்டுவரவில்லை , ஒருவரை கூட கைதுசெய்யவில்லை என பாராளுமன்ற  உறுப்பினர்   எஸ். வியாழேந்திரன்  பாரளமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்  .

நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக  சேவை புரிந்தவர்   மண்டூர்  1 ஐ சேர்ந்த   சச்சிதானந்தம் மதிதயன் ( 43 வயது )

கடந்த 26.05.2015  ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணி கடந்த நிலையில் மண்­டூரில் உள்ள மதி­தயன் வீட்­டுக்கு மோட்டார் சைக்­கிளில் இருவர் வந்­துள்­ளார்கள். ஒருவர் தலைக்கவசம் அணிந்­தி­ருந்­துள்ள நிலையில் மற்­றை­யவர் கையில் தலைக்­க­வசம் இருந்­துள்­ளது.

இதனை மதி­த­யனின் மனைவி அவ­தா­னித்­துள்ள போதும் தனது கணவர் அலு­வ­லகம் செல்­லா­ததால் அவரின் சேவை­யொன்றை நாடி எவ­ரேனும் வந்­தி­ருக்­கலாம் என எண்ணி வந்தவர்களை நோட்­ட­மி­டாது சமை­ய­ல­றைக்கு சென்று தேநீர் தயா­ரித்­துள்ளார்.

இந்­நி­லையில் மனைவி தேநீர் தயா­ரிக்கும் போது மதி­த­யனும் மோட்டார் சைக்­கிளில் வந்­தோரும் உரை­யாடிக் கொண்­டி­ருந்­தார்கள். அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை மதிதயனின் மனைவியால் முழு­தாக கேட்­கவோ அல்­லது அனு­மா­னிக்­கவோ முடியா விட்­டாலும் “அப்­படி செய்ய முடி­யாது” போன்ற சில வார்த்­தைகளை மதி­தயன் கூறு­வது மனைவி காது­களில் விழுந்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இந்­நி­லை­யிலே சில நிமி­டங்­களில் மதி­த­ய­னுடன் பேசிக்­கொண்­டி­ருந்­த­வர்கள் அவர் மீது துப்­பாக்கி பிர­யோகம் செய்து விட்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர்.

மதி­த­யனை 9 மில்லி மீட்டர் ரக துப்­பாக்­கியின் இரு சன்­னங்கள் பதம் பார்த்­துள்­ள­துடன் வெற்­றுத்­தோட்­டாக்­க­ளையும் சந்­தேக நபர்கள் பொறுக்கி தட­ய­மற்ற நிலையில் தம்­மு­ட­னேயே எடுத்து சென்­றுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. மதி­த­யனின் தலையின் பின்­பு­ற­மாக இரு துப்­பாக்கி குண்­டு­களும் பாய்ந்­துள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே சத்தம் கேட்டு சமை­ய­ல­றையிலிருந்து ஓடி வந்­துள்ள மனைவி கண­வ­னான மதி­தயன் இரத்த வெள்­ளத்தில் கிடப்­பதை கண்டு கதறி அழ முழு மண்­டூரும் மதி­த­யனின் வீட்டில் கூடி­யது.


இச் சம்பவம்  நடைபெற்று இதுவரை  யாரும் கைது  செய்யப்படவில்லை .