மட்டக்களப்பு மயிலம்பாவெளி இராம்நகர் காமாட்சி அம்பாள் தேவஸ்தான வருடாந்த வஸந்த நவராத்திரி பெருவிழா – 2017


(சிவம்)

மட்டக்களப்பு மயிலம்பாவெளி இராம்நகர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தான வருடாந்த வஸந்த நவராத்திரி பெருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) முதல் ஏப்ரல் (07) ஆம் திகதிவரை நடைபெறும்.

27.03.2017 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 08.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி 28.03.2017 செவ்வாய்க்கிழமை காலை 06.00 மணிமுதல் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு 09.30வரையும் திருவனந்தல் பூஜை கோ பூஜை காலைசந்திப் பூஜை தேவி மஹாத்மியபாராயணம் காமாÑp அம்பாள் விஷேடஅலங்கார அபிஷேகம் போன்ற கிரியைகளும்.

03.04.2017 திங்கட்கிகழமை மாலை 08.00 மணிக்கு வேதபாராயண உற்சவமும் 04.04.2017 செவ்வாய்க்கிழமை இரதோட்சவமும் 05.04.2017 புதன்கிழமை ஸ்ரீ சண்டிகோமமும் 06.04.2017 வியாழக்கிழமை தீர்த்தோற்சவமும் 07.04.2017 வெள்ளிக்கிழமை அம்மாளுக்கு திருக்கல்யாணமும் 11.04.2017 வியாழக்கிழமை பைரவர் சாந்தியும் இடம்பெறும்.

மேலும் விழா நாட்களில் இசை ஆராதனையும் விஷேட ஆன்மீக சொற்பொழிவுகளும் சர்வமங்கல வாத்திய இசைகளும் இடம்பெறும்.