வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச சபை வளாகத்தில் உலக நீர் தின நிகழ்வு

(எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டட உலக நீர் தினமானது நேற்று (22) வெல்லாவெளி பிரதான சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதியூடாக ஊர்வலமானது பிரதேச சபை வளாகத்தில்  நிறைவுபெற்றது இதில் உயிரினங்கள் அனைத்துக்கும் குடிநீர் அவசியமானது, மழை நீரைச் சேகரிப்போம், நீர்நிலைகளில் கழிவுப்பொருட்கள் வீசுவதை தவிர்ப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய  சுலோபங்கள் காணப்பட்டது.

அத்துடன் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இதற்கான விழிப்புணர்வு  கூட்டமும் இடம்பெற்றது பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் திரு.எஸ்.சதீஸ்கரன் அவர்களின் ஆரம்ப உரையும் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.எஸ்.புவனேந்திரன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திரு.கே.குணராசசிங்கம் பொது சுகாதார பரிசோதகர் திரு.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர்கள் நீரின் முக்கியத்துவம் நீர் இல்லாவிட்டல் உயிர்வாழமுடியாது போன்ற விடயங்களைப்பற்றி விரிவாக பேசப்பட்டது  இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் நுலக உதவியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


நிலையத்தில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், சமூக சேவைத் திணைக்களம், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பிரதேசசெயலகம் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர்தின முதியோர் வார நிகழ்வில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான வெளிக்காட்டும்; பேச்சுக்கள் கோலாட்டம் போன்ற கலைநிகழ்சிகள்; இன்று (23) நடைபெற்றது.இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.என்.வில்வரெத்தினம் அவர்களின் தலைமையுரையும் அதிதிகளாகக் கோட்டைக்கல்வி அதிகாரி திரு.பீ.பாலச்சந்திரன் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.எஸ்.அருள்மொளி மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பிரதேசத்தின் முதியோர்கள் சிறுவர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.