சமூகநல மேம்பாட்டு அமைப்பினரால் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு


வாழைச்சேனை கோறளைப்பற்று சமூகநல மேம்பாட்டு அமைப்பினரால் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சமூகநல மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் க.கமலநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதி அதிபர் திருமதி.எஸ்.அருந்ததி சுந்தரமூர்த்தி, கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, தமிழரசுக் கட்சியில் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், பிரதேச பாடசாலை அதிபர்கள்ää மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள சமூக சேவையாளர்கள் கல்வியலாளர்கள், வைத்தியர்கள், சோதிடர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டுத்துறை என மூப்பது பேர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டதுடன், கௌரவிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, தமிழரசுக் கட்சியில் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவியின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

வாழைச்சேனை கோறளைப்பற்று சமூகநல மேம்பாட்டு அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு தனது முதலாவது சேவையாக கௌரவிப்பு நிகழ்வை நடாத்துவதாகவும்ää இனிவரும் காலங்களில் பல உதவிகளை வறிய மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம் என கோறளைப்பற்று சமூகநல மேம்பாட்டு அமைப்பின் செயலாளர் க.கமலநேசன் தெரிவித்தார்.