வெல்லாவெளியில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று மூலகம் அழிக்கப்பட்டது.

 வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று மூலகமாக காட்சியளித்துக் கொண்டிருந்த மாமரம் ஒன்று அடியோடு வெட்டி  வீழ்த்தப்பட்டுள்ளது.  இப்போது வசித்துக் கொண்டிருக்கும் சந்ததியினருக்கே இம் மரத்தின் வரலாறு தெரியாத பழமை வாய்ந்த இம் மாமரம்  வெல்லாவெளிப் பாடசாலையின் அபிவிருத்தி கருதி அடியோடு வீழ்த்தப்பட்டமை வெல்லாவெளியின் வரலாற்றையே அழித்துவிட்டதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது பற்றி தெரிவித்த ஒரு முதியவர்; தனது அப்பா படித்த காலத்தில் இம் மரம் காணப்பட்டதாகவும். அதன் கீழ் இருந்து தனக்கு ஆசிரியர் கற்பித்ததாகவும் கூறிய அம் முதியவர் தனது ஒரு பிள்ளைளை இழந்து விட்டது போன்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
இன்னுமொருவர் குறிப்பிடுகையில் தான் இம் மரம் அழிக்கப்பட இருப்பதை அறியவில்லை எனவும், தனக்குத் தெரிந்திருந்தால் இதனை தடைசெய்திருப்பேன் எனவும் குறிப்பிட்டார்.