டெங்கு நோய் விவகாரம்; கிழக்கு-வடக்கு சுகாதார அமைச்சர்கள் விசேட பேச்சுவார்த்தை

(அபு அலா, சப்னி அஹமட்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீருடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தொடர்பினை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளதாக தெரிவித்ததுடன் இரு மாகாண அமைச்சர்களும் சில நிமிடங்கள் டெங்கினை கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர்.


இதன் போது, வடமாகாண சுகாதார அமைச்சரினால் கிழக்கு மாகாணத்தில் பரவி வருகின்ற டெங்கு நோயினை கட்டுபடுத்துவதற்கு எம்மால் எவ்வகையான உதவிகளையும் செய்யலாம் ஆகவே கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கிண்ணியா பிரதேச மக்களுக்கு உதவ நாம் தயார் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடத்தில், கோரியமைக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் ஆளனிப்பிரச்சினைகள் தொடர்பாகவும்,  வைத்தியசாலைக்கு தேவையான பொருட்கள் தொடர்பாகவும் எத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து வட மாகாண அமைச்சரினால் மிக விரைவில் இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் என்னை தொடர்புகொண்டு இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இன்று மிகப்பிரச்சினையாக மாறியுள்ள டெங்கு தொடர்பில் என்னை தொடர்புகொண்டு உதவிகளை வழங்க முன்வந்த வடமாகாண சபை சுகாதார அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் தெரிவித்தார்.