தகாத உறவால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்

மகளின் வீட்டில் இருக்­கும்­போது நண்­பகல் 12.00 மணி­ய­ளவில் மற்­றைய மகள் ரஞ்­சிதா கோல் எடுத்து 'அண்­ணாச்சி தூக்குப் போட்டு செத்­து­விட்டான்' என்றாள். உடனே நானும் கண­வரும் அங்கு சென்­ற­போது மகனை தாண்­டி­யடி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வ­தாக சொன்­னார்கள்.

இவ்­வாறு குறிஞ்­சா­மு­னையைச் சேர்ந்த தா.தச்­சி­தா­னந்தம் (வயது 20) என்­ப­வரின் மரண விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்த அவரின் தாயா­ரான சிவ­லெட்­சுமி கூறினார். காத்­தான்­குடி வடக்கு திடீர் மரண விசா­ரணை அதி­காரி ச.கணே­ச­தா­ஸினால் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணையில் சாட்சி மேலும் கூறி­ய­தா­வது;


"எனது மூத்த மகனை இனம் தெரி­யா­த­வர்கள் கடத்திச் சென்று பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. இரண்­டா­வது மகன் குடும்பப் பிணக்கு கார­ண­மாக ஒரு வரு­டத்­துக்கு முன்னர் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்டான். ஒரு மகன் திரு­மணம் செய்­து­விட்டான். கடைசி மூன்று பேரும் படிக்­கி­றார்கள்.

2016 ஆம் ஆண்டு ஆவணி மாதம் எனது கண­வரின் அண்­ணனின் மகள் மனோ­கரி அவ­ரு­டைய அப்பா அம்­மா­வுடன் சண்டை பிடித்­து­விட்டு வெளி­நாடு செல்­வ­தற்­காக எமது வீட்­டுக்கு வந்தாள். பின்னர் மர­ண­மான எனது மக­னையும் இவ­ளையும் சேர்த்து பிழை­யாக ஊரில் கதை பர­வத்­தொ­டங்­கி­யது. இப்­படி ஊரெல்லாம் கதைக்­கி­றார்­களே என்று மனோ­க­ரி­யிடம் கேட்டேன். அதற்கு அவர் சித்தி தச்சு எனது தம்பி. எங்­க­ளுக்குள் எந்த தப்­பான எண்­ணங்­களும் இல்லை என்று சொன்னாள். நீ இனிமேல் எங்கள் வீட்­டுக்கு வர­வேண்டாம். வெளி­நாடு போய்­விட்டு வந்து உங்­கட வீட்­டுக்கே சென்று விடு என்று நான் சொல்லி அவளை அனுப்­பி­விட்டோம்.
ஒன்­றரை மாதங்­களில் நாடு திரும்பி எங்கள் வீட்­டுக்கே வந்தாள். உன்­னையும் மகன் தச்­சு­வையும் பற்றி ஊரெல்லாம் பிழை­யாகக் கதைக்­கி­றார்கள். நீ வர­வேண்டாம் என்று சொன்­னபின் அவள் வரு­வ­தில்லை. ஆனால் மகனும் மனோ­க­ரியும் போனில் கதைப்­பது தெரிந்­தது. இரு­வ­ருக்­கு­மி­டையே தகாத உறவு இருப்­பதும் தெரி­ய­வந்­தது.

மக­னுக்கும் புத்­தி­மதி சொன்னோம். எனது கண­வரும் மகனும் உன்­னிச்­சையில் வாடியில் இருந்­தனர். இடை­யி­டையே வந்து சாமான் எடுத்துச் செல்­வார்கள். இப்­ப­டி­யான நிலை­யில்தான் மகள் ரஞ்­சிதா கோல் எடுத்து அண்­ணாச்சி செத்­து­விட்டான்" என்று சொன்னாள் என்றாள். இதே­வேளை மர­ண­மா­னதை அறிந்த எனது மகளும் தூக்கில் தொங்கி மர­ண­மானாள் என இலுப்­ப­டிச்­சேனை என்னும் இடத்தைச் சேர்ந்த பா.மனோ­கரி (வயது 27) என்­ப­வரின் மரண விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்த அவரின் தாயா­ரான மு.பூர­ணம்மா கூறினார். மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் காத்­தான்­குடி வடக்கு திடீர் மர­ண­வி­சா­ரணை அதி­காரி ச.கணே­சதாஸ் நடத்­திய விசா­ர­ணையில் சாட்சி மேலும் கூறி­ய­தா­வது;

"எங்­க­ளுக்கு மொத்தம் ஏழு பிள்­ளைகள் மூன்று மகன்­களும் ஒரு மகளும் திரு­மணம் செய்­து­விட்­டனர். இறந்த எனது மகள் இரண்டு தட­வைகள் வெளி­நாடு  சென்று இரண்டு வரு­டங்கள் தொழில் செய்து விட்டு வந்தாள். கடை­சி­யாக வெளி­நாடு சென்­றபின் எனது கண­வரின் தம்­பியின் மகன் தொலை­பேசி மூலம் அவ­ருடன் தொடர்பு கொண்டு வரச்­சொன்னான். அதனால் ஒன்­றரை மாதத்தில் திரும்பி வந்து கண­வரின் தம்­பியின் வீட்டில் மூன்று மாதங்­க­ளாக தங்­கி­யி­ருந்தாள். எனது கண­வரின் தம்­பியின் மகன் தச்­சி­தா­னந்­தத்­துடன் காதல் என்று கேள்­விப்­பட்ட போது அவ­ருக்கு புத்­தி­மதி சொன்னோம்.

இரு­வரும் அடிக்­கடி போன் கதைப்­பார்கள். நான் ஏசுவேன். அக்­காவும் தம்­பியும் கதைப்­பது போலவா கதைக்­கி­றீர்கள் என்று ஏசுவேன். தச்­சி­தா­னந்தம் தூக்கில் தொங்கி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு போகி­றார்கள் என அறிந்தோம். அதனால் நாங்கள் குறிஞ்­சா­மு­னைக்குச் சென்று மகளை வீட்­டுக்கு கூட்­டி­வந்தோம். சம்­ப­வ­தினம் காலை 9.00 மணி­ய­ளவில் சாப்­பாட்டை எடுத்துக் கொண்டு வீட்­டினுள் சென்­ற­ போது வீட்டு வளையில் தூக்கில் தொங்­கிய நிலையில் சட­ல­மாகக் காணப்­பட்டாள்" என்றார்.

மனோ­க­ரியின் தந்தை க.பால­சிங்கம் தனது சாட்­சி­யத்தில் கூறி­ய­தா­வது;

"குறிஞ்­சா­மு­னையில் உள்ள எனது தம்­பியின் மகன்   தச்­சி­தா­னந்தம் தூக்கில் தொங்கி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­போ­னார்கள். அதற்கு காரணம் எனது மகளும் தம்­பியின் மகனும் ஒரு­வரை ஒருவர் காத­லித்­தி­ருந்­த­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யது.

சம்­பவ தினம் காலை 9.00 மணி­ய­ளவில் வீட்­டுக்கு சற்றுத் தொலைவில் கம்பு வெட்டிக் கொண்­டி­ருக்­கும்­போது கத்தும் சத்தம் கேட்டது. ஓடிச்சென்று பார்த்தபோது மகள் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டாள்" என்றார். தூக்கில் தொங்கியதால் மிடர் இறுகி மூச்சுத் திணறி மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை செய்த மட்டு. போதனா வைத்தியசாலை டாக்டர் எச்.எம்.ஏ.எஸ்.தர்மசேன அறிக் கை