வாகரையில் பஸ் - ஆட்டோ விபத்து ! தந்தையும் மகளும் பலி

வாகரைப் பிரதேசத்தில் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாகப் பயணித்த பஸ்ஸும் முச்சக்கரவண்டியும்  நேற்று    (18) மாலை மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயான பாலையூற்றைச் சேர்ந்த செறின் எடன் (வயது 54); திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.