சர்­வ­தேச புவி தினம் இன்று அனுஷ்­டிப்பு

"சுற்­றுச்­சூழல் மற்றும் சுவாத்­திய மாற்­றங்கள்" என்னும் தொனிப்­பொ­ருளில் சர்­வ­தேச புவி தினம் இன்று  அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையின் சூழலை பாது­காக்­கவும் எதிர்­கால சமு­தாயம் பாது­காப்­பான வகையில் வாழவும் ஏற்ற வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் நகர்­வு­களும் பல பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

ஒவ்­வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி சர்­வ­தேச புவி தினம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரும் நிலையில் இம்­முறை  "சுற்­றுச்­சூழல் மற்றும் சுவாத்­திய மாற்­றங்கள்" எனும் தொனிப்­பொ­ருளில் இன்று அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இலங்­கை­யிலும்  சர்­வ­தேச புவி தினத்தை முன்­னிட்டு பல்­வே­று­பட்ட நிகழ்ச்­சிகள் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சின் செய­லாளர் உதய செனெ­வி­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,


உலக வெப்­ப­நிலை ஏற்­றத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அனை­வ­ரது ஒத்­து ­ழைப்பும் அவ­சியம் ஆகும். சுற்­றுச்­சூழல் வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு, சுவாத்­திய மாற்­றத்­திற்­கான பிர­தான கார­ண­மாகும். வெப்­ப­நிலை ஏற்­றத்தைக் கட்­டுப்­ப­டுத்த சகல துறை­க­ளி­னதும் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மா­ன­தாகும்.

21 ஆம் நூற்­றாண்டின் சுவாத்­திய மாற்றம் மனி­த­குல அபி­வி­ருத்­திக்கு சவா­லாக மாறி­யுள்­ளது.  சர்­வ­தேச ரீதி­யாக ஆராய்­கையில், சுவாத்­திய மாற்­றத்­திற்கு வித்­திடும் செயற்­பா­டு­களில் இலங்­கையின் பங்­க­ளிப்பு வெகு குறை­வாகும் என்று சுட்­டிக்­காட்டினார். எனினும் அதன் விளை­வு­க­ளி­லி­ருந்து இலங்கை தப்­பிக்க முடி­யாது. உலக வெப்­ப ­நி­லையை குறைப்­ப­தற்கு இலங்கை கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்க வேண்­டி­யுள்ளது.

இதற்­காக மின்­வலு, எரி­சக்தி கைத்­தொழில், போக்­கு­வ­ரத்துத் துறை போன்ற வற்றை சுற்றாடலுக்கு ஏற்ற விதத்தில் கட்டமைப்பது அவசியமாகும். இதற் கான கொள்கைகளை வகுப்பது முக்கியமானது. மக்கள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது என்றார்.