நாடுபூராகவும் மீண்டும் கடுமையான வரட்சி, இலட்ச கணக்கான மக்கள் பாதிப்பு : எப்போது மழை பெய்யும் : வளிமண்டலவியல் தகவல்

நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது.

எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நாடுபூராகவும் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக சுமார் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


இந்நிலையில் மார்ச் மாதம் அளவில் வரட்சியான காலநிலை முடிவுக்கு வந்தது. எனினும் இவ்வாரம் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. இதன்காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வரட்சி ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல்,யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான வரட்சியான காலநிலை நிலவுகின்றன.

இந்த வரட்சியான காலநிலை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.