தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக மானிய வீடமைப்புத் திட்டத்தின் கொத்தணி வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டுவிழா

தேசிய வீடமைப்பு அதிகார சபையினூடாக மானிய வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் இவ்வாண்டுக்கான முதலாவது கொத்தணி வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டுவிழா 25.04.2017 கண்ணபுரம்இ விவேகானந்தபுரம் ஆகிய கிராமங்களில், மட்டக்களப்பு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் திரு க.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. அந்தவகையில்இ மேற்படி இரு கிராமங்களிலும் 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டமானது போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையும்இ மக்கள் வீடுகளற்ற நிலையில் வாழும் நிலையினையும்இ கஷ்டப்பிரதேசங்களிலுள்ள மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதையும் விபரித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் கடந்தவாண்டு நாடாளுமன்ற வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போது விபரித்து உரையாற்றியிருந்தார். அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வீட்டுத்தேவைகளுள்ள மக்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச அவர்களின் வீடமைப்பு செயற்பாடுகளையும் பாராட்டி உரையாற்றி இருந்தார். அதன்போது இடைக்கிடையே எழுந்து பதிலளித்த அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள், வீடுகள் அமைக்கப்பட வேண்டிய கிராமங்களை அடையாளம் கண்டு பிராந்திய முகாமையாளருடன் கலந்துரையாடி விபரங்களை அனுப்பி வைக்குமாறு ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அமைவாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வெல்லாவளிஇ பட்டிப்பளைஇ ஏறாவூர்ப்பற்றுஇ வாகரைஇ கிரான் பிரதேசசெயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களை பிரதேச செயலாளர்கள் உதவித்திட்டமிடற்பணிப்பாளர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளுடன் இனங்காணப்பட்டன. இக்கிராமங்களை நேரடியாக சென்று பார்வையிடுவதிலும் பிராந்திய முகாமையாளர் திரு.க.ஜெகநாதன் அவர்கள் பங்களிப்பு செய்திருந்தார். 

எது எப்படியாக இருந்தாலும் வீடமைப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியில் கணிசமான பகுதி வெட்டப்பட்டுள்ளதால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீடுகளை அமைக்க முடியாதிருப்பதாக அமைச்சர்இ பிராந்திய முகாமையாளர் ஆகியோர் குறிப்பிட்டிருந்தார்கள். இது தொடர்பாக பிராந்திய முகாமையாளரின் ஆலோசனைகளுடன் அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் போன்றவர்களுடன் அவ்வவ்போது சந்தித்து ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மக்களுக்கான வீடுகளின் தேவை பற்றி வலியுறுத்தி வந்தார். இதனால் பரிசீலனை மேற்கொண்ட கௌரவ அமைச்சரும் அவரது அதிகாரிகளும் மீண்டும் வீடுகள் வழங்குவதற்கு முன்வந்தார்கள். இதற்காக ஜி.ஸ்ரீநேசன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் அமைச்சர் அவர்களை நேரடியாக சந்தித்து நன்றிகளைக் கூறினார். இதற்கான ஆலோசனைகளை வழங்கிய பிராந்திய முகாமையாளர் க.ஜெகநாதன், பிரதேச செயலாளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக பா.உ ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் குறிப்பிட்டார். மேலும் ஆயித்தியமலை, நெடியமடு தாந்தா, சத்துருக்கொண்டான் போன்ற பல கிராமங்களிலும் கொத்தணி வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார். இவ்வாறாக மொத்தம் 1000 வீடுகள் மானிய உதவித்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளன. எனவே, பயனாளிகள் இவ்வீடுகளை அமைப்பதற்கான பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும், எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் அவர்கள் கேட்டுக் கொண்டார். மட்டக்களப்பின் அபிவிருத்தி விடயத்தில் சகல கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது என்பதனையும் குறிப்பிட்டார்.