இலங்கையிலே ஆக குறைந்த கல்வியறிவை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கையிலே ஆக குறைந்த கல்வியறிவை  கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம்  கணிப்பிடப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

“போதையிலிருந்து விடுதலை பெற்ற சக வாழ்வுடன் கூடிய வாழ்வு” என்ற தொனிப்பொருளில் பேரணி  மட்டக்களப்பில் நேற்று  நடைபெற்றது .

இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்த மாவட்டத்திலே தொழில் வாய்ப்பு இல்லை , இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள்  எந்தவித  தொழிலும் அற்றவர்களாக  இருக்கின்றார்கள் அதே போல  பாடசாலை கல்வியை  விட்டு விலகுகின்ற மாணவர்களின்  தொகை அதிகமாக இருக்கின்றது ,   கல்வியிலே  இலங்கையிலே ஆக குறைந்த கல்வி அறிவை கொண்ட  மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் கணிப்பிடப்பட்டுள்ளது  ,  இது  67 வீதம்   " என குறிப்பட்டார்