கடந்த காலத்தில் அபிவிருத்தியில் அசமந்தப்போக்குக் காட்டப்பட்டதனால் கூடுதல் அக்கறை காட்டப்படவேண்டியுள்ளது- அமைச்சர் றவூவ் ஹக்கீம்

(வரதன்)
கடந்த காலப் பூதங்கள் மீண்டும் கிளம்புகின்ற காலத்திலேயே நாம் இரு சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆட்சியின் பங்காளர்களாக நாம் நிரந்தரமாக இருப்பதன் மூலம் நிறைய விடயங்களைச் சாதிக்க முடியும். வட கிழக்கு தமிழ் பேசும் சமூகங்கள் மிக நெருக்கமாக பயணிப்பதன்மூலம் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் .நாட்டில் சட்டம் ஒழுங்குகளைச் சீர்குலைக்கின்ற சம்பவங்கள் அண்மைக் காலங்களில் நடந்து கொண்டிருக்கின்ற.இதேவேளை பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் கடந்த காலத்தில் அபிவிருத்தியில் அசமந்தப்போக்குக் காட்டப்பட்டதனால் எமக்கு இங்கு கூடுதல் அக்கறை காட்டப்படவேண்டியுள்ளதென அமைச்சர் இன்று காலை மட்டக்களப்பு திசவீரசிங்க சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.



நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட 24.34 km நீளமான (200 மில்லியன் ரூபா செலவில்) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதி திறப்பு விழா நிகழ்வு மாவட்ட அரச அதிபர்  தலைமையில் இடம்பெற்றபோது அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் ந~Pர் அகமட் மற்றும் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்களான G. ஸ்ரீநேசன். சீ .யோகேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கம் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்