கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வீதி மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸினால் திறந்து வைப்பு


(சிவம்)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கி.மீ நீளமான வீதிகளுக்கு காபட் இட்டு திறந்து வைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் ரூபாய் 41.55 மில்லியன் செலவில் 5.208 மீற்றர் நீளமுடைய முனிச் வீதிப் பிரதேசத்தில் உள்ளடங்கும் முனிச் வீதியை உள்ளடக்கிய பிரதேசமாக கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய வீதி மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸினால் இன்று  (21)  திறந்து வைக்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 200 மில்லியன் செலவில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட 25 கி.மீ நீளமான வீதிகளுக்கு காபட் இட்டு திறந்து மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்ட வீதிகளை மக்களின் பாவனைக்கு கையளிக்கும்  நிகழ்வு அமைச்சர் ரவூப் ஹைக்கீமினின் தலைமையில் நடைபெற்றபோது குறித்த வீதியும் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா, மாவட்டச் செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ். சுதாகரன், மாநகரசபையின் பொறியியலாளர் என்.தேவதீபன், அரசடி கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்.விமலசிறி மற்றும் கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு எஸ். ராமதாஸ் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம் மாவட்டச் செயலாளரின் முயற்சிக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு  நன்றியும் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.