பிரித்தானியாவின் மென்செஸ்டர் தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை : வெளியுறவுத்துறை அமைச்சு

பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் நேற்று இரவு இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் இலங்கை எவருக்கும் பாதிப்பில்லையென வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவுத்துற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலுக்கு இலங்கை தமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலடைய பிரார்த்தனை செய்வதாக வெளியுறவுத்துறை அமைச்சின் ஊடக பேச்சாளர் மஹிசினி கொலன்னே தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


மென்செஸ்டர் தாக்குதலில்  19 பேர் உயிரிழந்துள்ளடன், 60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.