வாழைச்சேனை பேத்தாழையில் தமிழ் சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள்.


தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டும் மற்றும் வாழைச்சேனை பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழகத்தின் 29 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாகவும்  மாபெரும் விளையாட்டு நிகழ்வும் பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆசியுடன் பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு கழக தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக நேற்று(20) மாலை  2.05 மணியளில் அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாம் நாள் நிகழ்வில்

 தலையணை சமர், சாயமுட்டி உடைத்தல், ஜோடியாக முட்டை மாற்றுதல், திருமணமான பெண்களுக்கான ஓட்டம், வினோதமான முறையில் சாக்கு ஓட்டம், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், சிறுவர் மிட்டாய் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கம்பு சுற்றுதல், மற்றும் வினோத உடை போன்ற நிகழ்வுகள் மிகவும் கண்ணை கவரும் விதமாக நடைபெற்றதுடன் அவ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் அத்துடன் அதிதிகளாக  முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், வாழைச்சேனை உதவி பொலீஸ் அத்தியட்சகர் பி. எஸ். டி. சி. தயானந்த, கல்குடா பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. சி. எஸ். கே. கீரகல முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ. சிவநேசதுரை, கிராம சேவகர்கள், அதிபர்கள், மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஞாயிறு (21) காலை நெடுந்தூர மரதன் ஓட்டம் நடைபெற்றதுடன் மாலை முதல் நள்ளிரவு வரை மாபெரும் இசை  நிகழ்ச்சியும் இடம்பெற்றது.