சர்வதேச யோகா தினத்தின் முன்றாவது ஆண்டை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் யோகாசனப் பயிற்சிகள்


(சிவம்)

யோகாசனத்தின் மூலம் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளிலிருந்து குணம்பெறலாம் எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வூட்டும் யோகாசனப் பயிற்சிகள் நேற்று மாலை (21) கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தின் 3 ஆவது ஆண்டை முன்னிட்டு இந்நிய உயர்ஸதானிகர் ஆலயத்தின் வழிகாட்டலில் சக்தி ஆனந்த யோகா பாடசாலையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சிவசக்தி சிவபாதசுந்தரத்தின் தலைமையில் வாழும் கலை அமைப்பு, பிரம்மகுமாரிகள் நிலையம் மற்றும் யோகா சுகாதார இளைஞர் கழகம் என்பனவற்றின் அங்கத்தினர்களால் குறித்த பயிற்சிகள் இடம்பெற்றன.

ஆசனப் பயிற்சிகள்இ பிரணாயாமம், மூச்சுப் பயிற்சிகள், தியானங்கள்  உள்ளிட்ட பல்வேறு உடல் மற்றும் உளப் பயிற்சிகள் இடம்பெற்றன

இந்தியப் பிரதமா நரேந்திர மோதியின் முன்மொழிவினால் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பினால் 2014.09.21ஆம் திகதி சர்வதேச யோகா தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்டது.

உலகினில் 193 நாடுகள் யோகாசனப் பயிற்சகளை பின்பற்றும் நிலையில் 192 நாடுகளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மதத் தலைவர்கள்இ மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்இ ஞா.சிறிநேசன்இ கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரக்குமார் பிரசன்னாஇ வர்ததகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.