கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு கனடா ஒத்துழைப்பு - அமைச்சர் நஸீர்

(சப்னி அஹமட்)

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கனடா நிறுவனங்கள் உதவி வருகின்றது.

அந்தவகையில்; கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் கட்டமாக கனடா வைத்தியர் குழுவொன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இன்று (19) கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்றது.

 சக்தி வாய்ந்த ஓர் சுகாதார அபிவிருத்து கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வர வேண்டும், அதற்காக சிறந்து சுகாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு கனடாவின் உதவி தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அங்கு வருகை தந்த வைத்தியர் ப்ரன்சிஸ் தெசிஸ்சர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சுகாதாரத்துறையின் அபிவிருத்தி மேலும் வலு சேர்க்குமுகமாக கனடா நிறுவனங்களின் பங்களிப்பு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் உள்ளதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அபிவிருத்திகளை நாம் மேலும் பெறுவதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமலும் பெற வேண்டியது எமது கடமை என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச துறையின் மாகாணப்பணிப்பாளர், சுதேச வைத்திய துறை வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.