செப்டம்பரில் பாரிய சுகாதார சேவைகளை மக்களிடம் கையளிக்கவுள்ளோம் – கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர்


கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டுகளின் பலமில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுகளில் கல்முனை பிராந்தியத்தில்மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மக்களிடம்கையளிக்கப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ,எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண சுகாதார பிராந்தியங்களுக்கு இடயில் மேற்கொள்ளப்பட்டஅபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான நடவடிக்கை தற்போது ஆராய்ந்துவருகின்றது. அந்தவகையில் கல்முனை சுகாதார பணிமனை ஊடாகமேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பாகவும், இவ்வருடம்மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் இன்று கல்முனை சுகாதாரபணிப்பாளர் காரியாலயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இன்று (22) கல்முனை சுகாதார சேவையில் பணிமையில் ஆராய்யப்பட்டது. அதன் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

360 மில்லியன் ரூபா நிதி கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கு 2016ஆம் ஆண்டுகிடைக்கப்பெற்றது. அவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளுடன்இவ்வருட நிதிகளையும் ஒதுக்கி ஒலுவில், ஆலம்குளம், பாலமுனை,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, அன்னாமலை, இறக்காமம், திருக்கோவில்,நைனாகாடு, கல்முனை போன்ற வைத்தியசாலைகளுடன் இன்னும் பலவைத்தியசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு மூலம் பல அபிவிருத்தி திட்டங்கள்மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆகவே குறித்த அபிவிருத்திகள் யாவும் மிக அவசரமாகதேவைப்படுவதால் நாம் மிக சீக்கிரம் இவ்வேலைத்திட்டங்களைநடைமுறைப்படுத்தி மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர்தெரிவித்தார்.

மேலும், இந் நிதிகளில், பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள்தொடர்பாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், அதில்உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராய்யப்பட்டதுடன். கல்முனைபிராந்தியத்தில் உள்ள வைத்தியசாலைக்கு இவ்வருட நிதியில் சிலஅபிவிருத்திகளுக்காக ஒதுக்கி எதிர்வரும் செப்டம்பர் மாதம் அனைத்துஅபிவிருத்திகளையும் மக்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் இங்கு கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் உத்தரவிட்டார்.

மிக விரைவில் உத்தியோக சில நிகழ்வுகளை நாம் மத்திய சுகாதார அமைச்சர்ராஜித சேனாரத்தனவினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளோம் எனவும்அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன்,வைத்தியசாலைகளில் மேற்கொள்ளும் அபிவிருத்திகளுக்கு வைத்தியசாலைகளின்வைத்தியர்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவமளித்து செயற்படுமாறும்அங்கு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதனைத்தொடர்ந்து கல்முனை, மட்டக்களப்பு பிராந்தியங்களுக்கான புதியவாகனங்களும் கையளிக்கப்பட்டது.


இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்முகாகனந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர்உசைனுடீன், மேற்பார்வை ப்ரேம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல்பிரிவின் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்அலாவுத்தீன், பிரதம கணக்காளர், பொறியிலாளர்கள், கட்டிட திணைக்கள அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல்அதிகாரி உள்ளிட்டவர்கள் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.