இளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம்

குறைந்த வருமானத்தைக்கொண்ட நாடுகளிலிலேயே வீதி விபத்துக்களினால் இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இளம்ப ருவத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கூடுதலான மரணத்திற்கு வீதி விபத்துக்களே காரணம. 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்ட கட்டிளம் பருவ இளைஞர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் கட்டிளம் பருவ இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள். கட்டிளம் பருவ இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.

2030 ஆண்டுக்கான நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் இலக்கை அடைய வேண்டுமாயின், இந்த வீதி விபத்துக்களை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.