இலங்கை அமைச்சு பொறுப்புக்களில் சில மாற்றங்கள் ! விபரம்


இலங்கை அமைச்சு பொறுப்புக்களில் சில மாற்றங்கள் நாளை அல்லது வரும் நாட்களில் மேற்கொள்ளப்படலாம் என தெரிய வருகிறது. அண்மைக்காலங்களில் பலரது விமர்சனத்துக்குள்ளான நிதி அமைச்சு முதல் வெளி விவகார அமைச்சுக்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளி விவகார அமைச்சராகவும் மங்கள சமர வீர நிதி மற்றும் ஊடக அமைச்சராகவும் நியமிக்க பட உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத  உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஊடக அமைச்சராக இருக்கும் கயந்த கருணாதிலக்க பொது நிர்வாக அமைச்சராகவும்,ரஞ்சித் மத்தும பண்டார காணி அமைச்சராகவும்  நியமிக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
துறை முகங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கள் உள்ளிடட இன்னும் சில துறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவர படலாம் எனவும் இறுதியாக ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து இவற்றுக்கான சாதகமான முடிவுகள் காணப்படுவதாகவும் விரைவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது.