வைத்தியசாலையின் எழுதப்படாத சட்டத்தின் மூலம் அவதிக்குள்ளாக்கப்படும் மக்கள்

 வைத்தியசாலை விடுதியில் உள்ளவர்களை பார்வை இட வருபவர்களை பாதணிகளை வெளியில் கழற்றிவிட்டு வருமாறு நிர்ப்பந்திப்பதாக மக்கள் விசனம்

இது குறித்து மேலும் தெரியவருவதாவது வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்வை இட வருபவர்களின் பாதணிகளை விடுதிக்கு வெளியே கழற்றி விட்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்

இதற்கான காரணம் கேட்கும்  போது நோய் தொற்று கிருமிகள் பரவுகின்றன மற்றும் நோயாளர்கள் அதிகளவில் இருந்தால் கட்டில் இல்லாமல் நிலத்தில் பாய் போட்டு இருக்கவேண்டிய நிலை எனவே பாதணிகளை கழற்றிவிட்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் வைத்தியசாலை விடுதியில் தங்கி இருப்பவர்கள் நோயாளர்கள் எனவே அந்த விடுதிக்குள் நோய் கிருமி தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதோடு நிலத்திலும் அதிகளவு நோய் கிருமிகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை இது இவ்வாறு இருக்க வெளியில் இருந்து பார்வையிட செல்லும் பார்வையாளரான சுகதேகி பாதணி இன்றி உள்ளே செல்லும்போது நோய் கிருமி தாக்கத்திற்கு இலகுவாக உட்பட சாத்தியகூறுகள் அதிகம்.

இதே போல விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களும் பாதணி அணிய அனுமதிக்கப்படுவதில்லை இவர்களுக்காக மலசலகூடத்தில் இவர்களுக்கான பாதணிகளை பயன்படுத்திவிட்டு மலசலகூட வாசலருகில் வைத்து விட்டுவர வேண்டும் இது ஒரு நல்ல நடைமுறை என்றாலும் மலசலகூட பாதணியை கழற்றிவிட்டு வெறும் பாதத்தோடு வரும்போது எப்படியோ நோய்கிருமிகள் தாக்கம் அதிகமாகவே காணப்படும்.

எது எப்படி இருந்தாலும் நோயாளர்களும் பார்வையாளர்களும் பாதணிகளை கழற்றிவிட்டு உள்ளே நுழைவது சுகாதார முறைப்படி இருப்பதற்கு வழிவகுக்கும் என்று கூறினாலும்
அங்கு பணி புரியும் வைத்தியர்கள் அதிகாரிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பாதணிகளுடனே வலம்வருகின்றனர்
இவர்கள் அவர்களது மலசலகூடம் சென்றாலோ அல்லது வெளியில் சென்று வந்தாலோ அவர்கள் பாதணிகளுடனே வலம்வருகின்றனர் விடுதியினுள், அப்போ இந்த நோய் கிருமி தாக்கம் அவர்கள் பாதணிமூலம் பரப்பப்படாதா எனவும் மக்கள் தமது அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பாதணிகளை கழற்றிவிட்டு பார்வை இட செல்லவேண்டுமாயின் அங்கு கடமையாற்றும் அதிகாரிகளும் பாதணிகளை வெளியில் கழற்றி வைத்துவிட்டு சேவையாற்ற வேண்டும்
அல்லது பார்வையாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் விடுதியினுள் செல்ல பாதணிகளை வழங்கவேண்டும் விடுதி வாசலில்

எழுதப்படாத சட்டமொன்றை வாழைச்சேனை வைத்தியசாலை நிர்வாகம் கட்டாயப்படுத்தி அமுல்படுத்துவதால் பார்வையாளர்கள் பலர் நோய் கிருமிகளுடன் வீடு செல்லும் வாய்ப்பே அதிகமாகவுள்ளது
சில பார்வையாளர்களுக்கு காலில் காயம் எக்சிமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு நோய் தொற்று இலகுவில் தொற்றும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது.

பார்வையாளர்கள் நோயார்களை பார்வை இட வந்து போனதும் அந்த விடுதி நிலங்களை தூய்மை படுத்த இதற்கென ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்ட சுகாதார ஊழியர்களும் உண்டு என்பதை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இதுதொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் உகந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்கள் அவாவாக உள்ளது