பறி போகும் அபாயத்தில் இன்னுமொரு கோயிலும் கோயில் நிலமும்


(லட்சுமி )
இந்த படங்களில் உள்ள கோயில் எங்குள்ளது தெரியுமா ?

இந்த பிள்ளையார் கோயில் புனானைக்கும் ரெதிதென்னை க்கும் இடையில் உள்ள ஜெயந்திபுர எனும் இடத்தில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான பாதைக்கருகில் உள்ள கோயிலாகும்

இந்த கோயிலானது எந்தவிதமான பூஜைகளோ புனருத்தாரணமோ இன்றி காணப்படும் கோயிலாகும்.

இந்த கோயிலுக்காக மகாவலி திட்டத்தின் கீழ். சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனாலும் தற்போது

இந்த கோயிலின் வெளி வீதி சுருங்கி கொண்டே வருவதோடு இந்த கோயிலின் கிணற்றுக்கும் கோயிலுக்கும் நடுவே பாதையும் அமைக்கப்பட்டு கிணறு வேறாக்கப்பட்டு சுற்று மதில்களோ அல்லது வேலியோ இல்லாமல் காட்சியளிக்கிறது

இந்த கோயில் நிர்வாகிகள் யார் ?
இந்த கோயிலுக்குரிய ஏனைய நிலங்கள் எவை ?
தற்போது இதன் நிலை என்ன ?
யார் இதை கவனிப்பது ?
இந்த நிலம் கோயில் யாரின்
கட்டுப்பாட்டில் உள்ளது ?

நிச்சயமாக இந்த கோயிலுக்கு ஒரு நிர்வாகம் இருந்திருக்க வேண்டும் அதேவேளையில் இந்த கோயிலுக்கென்று நிலங்களும் இருந்திருக்கவே வேண்டும்
சரி போனவை போகட்டும் இப்போ இந்த கோயிலை என்ன செய்வது யார் பராமரிப்பது ?
கவனிப்பார் அற்று கிடக்கும் பல நிலங்கள் பறிபோகும் இக்கால கட்டத்தில் இதுகும் நம் கையை விட்டு போகும் நிலையுள்ளதாக சமூக சேவை அமைப்பு இளைஞர்கள் விசனம் தெரிவிப்பதோடு இதற்காக எதையாவது செய்ய வேண்டும் என உறுதி பூண்டுள்ளனர்.
இதற்கமைய இதற்கு சுற்று வேலி அமைக்கவும் வர்ணம் பூசவும் யாராவது நல்லுள்ளங்கள் பண உதவி புரிந்தால் இளைஞர்கள் ஆயத்தமாக உள்ளார்கள் இந்த கோயிலை புனரமைத்து புது பொலிவுடன் தோன்ற செய்ய.

புனரமைக்க பண பலம் கொண்ட யாராவது முன் வருபவர்கள் இருந்தால் உதவி புரியலாம்.

கோயிலை கைப்பற்ற மற்றவர்கள் நடவடிக்கை எடுக்க முன் அரசியல் வாதிகளோ அல்லது சமூக அமைப்புகளோ அல்லது தனி நபர்களோ அல்லது இந்து அமைப்புகளோ நடவடிக்கை எடுத்து பறிபோகும் நிலையில் உள்ள கோயில் நிலத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.