பின்தங்கிய பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேடவகுப்புகள் ஆரம்பம்



மன்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலையில் இருந்து 2017, 2018 ஆண்டுகளில் க.பொ.த(சா.த)பரீட்சையில் தோற்ற இருக்கும் தரம் 10,11 மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேடவகுப்புகள் சுவிஸ்( ];( Basel) வாழ் திரு.தங்கராஜா கிருபராஜா அவர்களின் அனுசரணையுடன்; இலவச வகுப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 
புலம்பெயர் ஐரோப்பாவாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனைமேற்;கு பிதேசசெயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத் தோட்டம்,மகிழவட்டவான் நெல்லூர் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை 18 ஆம்திகதி இலவச வகுப்பு ஆரம்பமானது.
புலம்பெயர் ஐரோப்பாவாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனைமேற்;கு பிதேசசெயலகப் பிரிவில் உள்ள நரிப்புல்லுத் தோட்டம்,மகிழவட்டவான் நெல்லூர் மற்றும் மணிபுரம் ஆகியகிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக,மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ளபாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும்  நோக்கில் முதல் கட்டமாக நரிப்புல்லுத் தோட்டம்,மகிழவட்டவான் கிராமங்களில் 2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2 வது குழந்தைகளுக்கு மேல்பெற்றெடுத்த 13 தாய்மார்களுக்கு தலாரூபா 10,000.00 வும்; பிள்ளைபராமரிப்பிற்காக 18 வயதுவரைமாதம் தோறும்தலாரூபா 1,000.00 வும் வழங்கிவைக்கப்பட்டது. இதனை சுவிஸ்வாழ் திரு.செ.அமிர்தலிங்கம் அவர்களின் கன்னி முயற்சியாக ஆரம்பித்துவைத்தார். 
தொடர்ந்து நான்காம் கட்டமாக 09.04.2017 மேலும் மேற்படி கிராமங்களில் உள்ள 2016ல் க.பொ.த(சா.த)பரீட்சையில் தோற்றி உயர்தரத்திற்குத் தகுதியான 13 மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்
 இவற்றுள் சிறந்த பெறுபோறுகளைப் பெற்ற மாணவர்களுக்குத் தலா ரூபா 10,000.00 மும் ஏனையோருக்குத் தலாரூபா 3,000.00 பணமும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கான நிதிதிருமதி.ராதிகா திவாகரன்(சுவிஸ்) அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் இப் பிதேசங்களில் எதிர்வரும் காலங்களில் 9ஏ பெறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 25,000.00 மும் திரு.காத்தமுத்து யோகேந்திரன்(இத்தாலி) அவர்களின் அனுசரணையுடன் வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. 
இந் நிகழ்வின் பிரதம அதிதியாகதிரு.எஸ்.மகேந்திகுமார்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்  ,கௌரவ அதிதியாக திரு.எஸ்.மகேந்திகுமார்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்  மண்முனைமேற்குவலயம் திரு.க.ஹரிகரராஜ் பிரதிக் கல்விப்பணிப்பார்,மற்றும் சிறப்புஅதிதிகளாகதிரு.ரி.சோமசுந்தரம்,கோட்டக்கல்விஅதிகாரி,மண்முனைமேற்குவலயம்,மற்றும் கிராமஅபிவித்திச் சங்கத் தலைவர்கள் பாடசாலைகளின்அ திபர்களும்,கலந்துசிறப்பித்தனர்.

தொடர்ந்து நேரடியாக விஜயம் செய்த சுயிஸ்வாழ் திரு.ரி.சிவகுமார்(சுகுமார்)நிகழ்சித்திட்டங்களில் பயனாளிகளான குடும்பங்களுக்கு ஆடைகளும் சிறுவர்களுக்கு இனிப்புகளும் பணமும் வழங்கியிருந்தார்.