மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு - ஆரம்ப படங்கள்

(சதீஸ்)
​போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் வியாழக்கிழமை 15ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வு மூன்று நாட்கள் கொண்டதாக, ஜுன் 15ஆம் 16ஆம் 17ஆம்  திகதிகளில் நடைபெறுகின்றது.

இம் மாநாட்டின்   18 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்திற்கான கலாசார மற்றும் தேடல் யாத்திரையுடன் நிறைவு பெறுகின்றது.


இம் மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரி. ஜெயசிங்கம் முன்னாள் பேராசிரியர் எஸ். மௌனகுரு, கலை கலாசார பீட பீடாதிபதி கே. ராஜேந்திரம், கொழும்பு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் என். செல்வக்குமரன், பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு உள்ளிட்ட பலர் சலந்து சிறப்பித்தனர்.