மட்டக்களப்பில் அமெரிக்க தூதரகத்தின் ஏற்பாட்டிலான இஃப்தார் நிகழ்வு








இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாபின் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு    நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்பிற்குச் சென்றிருந்த அமெரிக்க தூதுவர், கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்காக இந்தஇப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்
குறித்த நிகழ்வில்  அமெரிக்க தூதுவர்  உரையாற்றுகையில்

 இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலேயே நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது எனத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை வன்மையாக கண்டித்துள்ளார்.

 மேலும், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடனும் அரசுடனும் இணைந்து வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை கண்டிப்பதுடன், சமூகங்களின் ஒற்றுமைக்காக புனித நோன்பு தினத்தில் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும். இலங்கையில் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் அமெரிக்கா பல்வேறு வகையில் பொருளாதார மற்றும் இராஜதந்திர முறைகளில் உதவிவருகிறது. அதன்படி எதிர்க்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் அதிக கரிசனை செலுத்தப்படும் என்றார்.