கணேசமூர்த்திக்கு புத்திபேதலித்து விட்டதா ? முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர்களை எவ்வளவிற்கு முட்டாளாக்கப் பார்க்கின்றார்கள்



கொக்கட்டிச்சோலையில் சத்தோச திறப்பு விழா பற்றி கருணா அம்மான் கருத்து தெரிவித்துள்ளார் .

அவர் குறிப்பிடுகையில்

" கொக்கட்டிச்சோலையில் சத்தோச திறப்பு விழாவில் நடந்த நிகழ்வை கிழக்கு வாழ் தமிழ்மக்கள் சாதாரணமாக எடுத்து விட முடியாது கூட்டமைப்பினர் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தாலும் எவரும் அதற்கு அழைக்கப்படவில்லை அதற்குரிய ஆளுமையும் கூட்டமைப்பினருக்கு இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.
 இதில் இருந்து இன்னும் ஒன்று நமக்கு புலனாகின்றது தேசிய அரசாங்கத்தின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்பதே ஆகும் ஏற்கனவே பதினொரு ஆசனங்களை வைத்திருந்தும் வெறும் ஏழு ஆசனங்களை எடுத்த முஸ்லிம்களிடம் மாகாணசபையை ஒப்படைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது இதனையே செய்யப்போவதாக முஸ்லிம் அமைச்சர்களுக்கு வால்பிடிக்கும் கணேசமூர்த்தி அவர்கள் அதுவும் படுவான்கரையில் முழங்கியுள்ளார் இவருக்கு என்ன புத்திபேதலித்து விட்டதா என எண்ணத்தோன்றுகின்றது.

 உண்மையிலேயே நான் இதை அப்பாவி முஸ்லிம் மக்களுகு எதிராக சொல்லவில்லை  முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர்களை எவ்வளவிற்கு முட்டாளாக்கப் பாக்கின்றார்கள் என்பதை கிழக்கு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் நாம் ஒன்று திரண்டால் கண்டிப்பாக கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழரை முதல்வராக கொண்டு வரமுடியும் வரும் தேர்தலில் இவர்களுக்கு ஒரு பாடம் நாம் கற்பிக்க வேண்டும் ஏற்கனவே இந்த நான்கு வருடங்களில் நாம் பெரும்பாலான நிலங்களை இழந்துள்ளோம் இது தொடருமானால் மட்டக்களப்பு மாவட்டம் ஒரு அத்திப்பட்டி கிராமமாக மாறும் நிலை ஏற்படலாம் இதை குறிப்பாக மட்டக்களப்புவாழ் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் "