முதலமைச்சரை நீக்க ஆளுநரைச் சந்தித்தவர்கள் இந்த அப்பாவி தமிழ் இளைஞனுக்காக சந்திப்பார்களா?




கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு நேற்று முன்தினம் மொனராகலை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
கடந்த 7 வருடங்களாக சிறையில் இருக்கும் கேதீஸ்வரன் என்னும் 28 வயதுடைய தமிழ் இளைஞருக்கே நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

யுத்தம் முடிந்த பின்பு இலங்கை அரசு கேட்டுக் கொண்டபடி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இந்த இளைஞருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனக்காக ஒரு வழக்கறிஞரைக்கூட நியமிக்க முடியாத வறுமை நிலையில் இருக்கும் இந்த இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14 நாட்களுக்குள் அப்பீல் எடுக்க வேண்டும். இல்லையேல் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் இந்த அப்பாவி இளைஞர் இருக்கிறார்.

முதலமைச்சரை நீக்குவதற்காக நள்ளிரவில் ஓடிச் சென்று ஆளுநரைச் சந்தித்த எமது தமிழ் தலைவர்கள் இந்த இளைஞருக்கு உதவ முன்வருவார்களா?

முதலமைச்சரை நீக்குவதற்காக ஆளுநருடன் சிங்கள மொழியில் பேசிய சி.கே.சிவஞானம் இந்த இளைஞருக்காக சிங்களத்தில் பேசாவிட்டாலும் தமிழிலாவது பேச முன்வருவாரா?

தமது ஊழல் அமைசர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க ஓடிச்சென்ற சம்பந்தரும் சுமந்திரனும் இந்த இளைஞருக்கு உதவ முன்வருவார்களா?

சரணடைந்த 12800 போராளிகள் மீது எந்த வழக்கும் இன்றி விடுதலை செய்வித்தது தானே என்று முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் வவுனியாவில் பேசியுள்ளார்.
அது உண்மை என்றால் சரணடைந்த இந்த இளைஞன் ஏன் வழக்கு எதுவுமின்றி விடுதலை செய்யப்படவில்லை என்பதை அவர் கூறுவாரா?

குறிப்பு-  தமிழ் தலைவர்கள் யாருமே இந்த அப்பாவி இளைஞனுக்கு உதவப் போவதில்லை. எனவே யாராவது உணர்வுள்ளவர்கள் தயவு செய்து இந்த இளைஞனுக்கு உதவுங்கள்.