சுவாமி விபுலாநந்தரின் ஆவணப் படம் நவீன டிஜிடல் முறையில் வெளியீடு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலாநந்தரின் ஆவணப் பட வெளியீடு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் நல்லையா உடையார் குடும்பத்தினரின் 07 ஆம் நாள் திருவிழாவில் (20.07.2017) மாலை 7.00 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.

இவ் ஆவணப் படத்தை சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.பாபு வசந்தகுமார் அவர்களின் தயாரிப்பிலும் திரு.ராகுலன் சீவகன் அவர்களின் இயக்கத்தில் திரு.பூபாலரெட்ணம் சீவகன் அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தயாரிப்பாளர் திரு.பாபு வசந்தகுமார் அவர்களினால் கடந்த வருடம் மாமாங்கேஸ்வரர் திருவிழாவில் மாமாங்கம் கோவில் புகழ்பாடும் இறுவட்டு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.