அடுத்து வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்கு பகுதி மற்றும் கிழக்கு மாகாணத்தில் அடுத்து வரும் நாட்களில் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு, மத்திய , தெற்கு , சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார், ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகமாக காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோர பகுகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசும். மின்னலிருந்து ஏற்படும் அனர்த்தங்களை தவித்துக்கொள்வதற்காக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.