திருகோணமலையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்திய நடமாடும் சேவை

(சப்னி அஹமட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்இ நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மாவட்டந்தோறும் சென்று மக்களின் குடிநீர் பிரச்சினைகளைகளுக்கு தீர்வு காண்போம் என்ற விசேட திட்டத்தின் கீழ் நடைபெறும் 06வது நடமாடும் சேவை இன்று (15) சனிக்கிழமை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்தியிருந்தது.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந் நடமாடும் சேவையில்; அமைச்சர் ரவூப் ஹக்கீம், சபையின் பணிப்பாளர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேரடியாக மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, சீறு நீரக நோய் பரவலாக்காணப்படும் பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக RO Plant எனப்படும் நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பெறுக்கொடுக்கப்பட்டதுடன், குழாய்நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்பட்டதுடன், பாடசாலை வைத்தியசாலை மதஸ்தாபனங்கள் முதலான பொது இடங்கள்க்கு நீரை தேக்கி வைக்கக்கூடிய 30 நீர் தாங்களிகளும் அதற்கான ஆவணங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டது.


மேலும், திருகோணமலை மாவட்டத்தைலும் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் பல வைத்தியர்களுக்கு கட்டில்இ மெத்தை என்பன கையளிப்புஇ சரியான பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவகற்றல் வசதி யை ஏற்படுத்திக் கொள்வதற்கு 75 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சமூகஞ்சார் அமைப்புக்கள் சிலவற்றிற்கு உபகரணத் தொகுதிகள் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள், நீண்டகாலமாக தீர்த்து வைக்க முடியாமல் இருந்த ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்த்து வைக்கப்பட்டது, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சபையின் உப காரியாலயமொன்றை கிண்ணியாவில் திறந்து வைப்பது போன்ற சேவைகள் நடைபெற்றது.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், வீதியபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.