துறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் - பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்


(சகா,சப்னி அஹமட்)

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒலுவில் துறைமுகத்தில் உள்ள சிக்கல் நிலைமைகளை கண்டறிய இன்று (22) காலை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

ஒலுவில் துறைமுகத்தில் அன்மைக்காலமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமுகமாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இங்குள்ள பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டதுடன், மக்கள் பிரதிநிதிகளிடமும் இங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் குறித்த துறைமுகத்தில் உள்ள பிரச்சினைகள் அங்கு எத்திவைத்தார் குறிப்பாக மண் அகழ்வு பிரச்சினை தொடர்பாகவும், மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியங்கள் தொடர்பாகவும், மீன்பிடியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் அங்கு உரையாற்றினார்.குறித்த மண் அகழ்வு பிரச்சினை, மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளரியங்கள், நட்ட ஈடு வழங்காமல் உள்ளவர்களுக்கான நட்ட ஈடு வழங்கல், காணி உரிமையாளர்களுக்கான பணத்தினை வழங்குதல் போன்றவற்றிற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அங்கு விரைந்த துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து துறைமுகத்தில் உள்ள பிரச்சினைகளை அறியும் பொருட்ட நேரடியாக குறித்த இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளுக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க உத்தரவிட்டார்.

இதன் போது அமைச்சர் தயாகமகே, பிரதியமைச்சர்களான பைஷல் காசீம், முத்து ஹெட்டிகம,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர். துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சின் செயலாளர் ஜயம்பத்தி, அம்பாறை மாவட்ட மேலதிக அரசங்க அதிபர் உள்ளிட்டவர்களுடன் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.