மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத் தேர்தல்


மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் பாடசாலையின் அதிபர் ரி. ராஜமோகன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இத் தேர்தலானது தரம் 06 தொடக்கம் 09 வரையான வகுப்புகளுக்கு முதற்கட்டமாகவும், தரம் 10, 11 வகுப்புகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் இடம்பெற்றது. இத் தேர்தலில் மாணவர்களின் பங்களிப்பும், ஆர்வமும் சிறப்புற இருந்ததைக் காணக்கூடியதாக இருந்ததுடன் 73 வீத வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.