"ஊருக்கு பொலிஸ்” என்ற தொனிப் பொருளில் பொலிஸ் நடமாடும் சேவை

(பைஷல் இஸ்மாயில்)

பொதுமக்களின் தேவைகளை இலகுபடுத்தி நிறைவேற்றிக்கொடுக்கும் நோக்கில் ”ஊருக்கு பொலிஸ்” என்ற தொனிப் பொருளின் கீழ் பொலிஸ் நடமாடும் சேவை நேற்று (20) அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமில் தலைமையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவைகள் யாவும் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னொடுக்கப்பட்டு வருகின்றது. இதில், பொலிஸ் சேவை, சுகாதார, சுதேச வைத்திய சேவை, பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் போன்ற திணைக்களங்களின் பல சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளை மிக விரைவாக செய்துகொடுக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் தனது சேவைகைளை “ஊருக்கு பொலிஸ்“ என்ற தொனிப் பொருளில் ஆரம்பித்து முன்னொடுத்து வருகின்றது.

இந்த நடமாடும் சேவை நடாத்தப்படுகின்ற குறித்த பிரதேசத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சேவையை மட்டும் ஒரு மாத காலத்துக்கு பொலிஸ் சேவையை வழங்க முன்வந்து செயற்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார, சுதேச வைத்தியத்துறையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேசத்திலுள்ள அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோரினால் இரத்ததானமும் வழங்கி வைக்கப்பட்டதும் விஷேட அம்சமாகும்.