மாமாங்க கோவில் வளாகத்தில் பெண்கள் தீர்த்தமாடியபின் ஆடைகள் மாற்றுவதற்காக அமைக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு நிகழ்வு.


( சிவகுமார் )


மாமாங்க கோவில் வளாகத்தில் பெண் பக்த அடியார்கள் தீர்த்தமாடியபின் ஆடைகள் மாற்றுவதற்காக  அமிர்தகழி இளைஞர் கழகத்தினரால் அமைக்கப்பட்ட புதிய கட்டட திறப்பு நிகழ்வு.


இது தொடர்பாக அண்மையில் முகநூலில் வேண்டுதல் விடப்பட்டு பலபேரால் இது தேவையான ஒரு விடையமென பேசப்பட்ட விடையமாகும் என்பது குறிப்பிடத்தக்கது


தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் " துறுனு சிரம சக்தி" வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டிலும் அமிர்தகழி - மாமாங்க மக்களின் பங்களிப்புடனும் மாமாங்க கோவில் வளாகத்தில் பெண் பக்த அடியார்கள் தீர்த்தமாடியபின் ஆடைகள் மாற்றுவதக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடதிறப்பு நிகழ்வு அமிர்தகழி இளைஞர் கழக தலைவர்   தனுஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர்   ஹாலிடின் ஹமீர் மாமாங்க கோவில் பிரதம வண்ணக்கர்  விக்கிரமன் , தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கலாச்சார பிரிவு உதவி பணிப்பாளர்  ஈஸ்வர ராஜா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் உத்தியோகஸ்தர் திருமதி நிஷாந்தி அருள் மொழி ,மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் உத்தியோகத்தர்   அருளானந்தம் மற்றும் அமிர்தகழி - மாமாங்க பிரதேச சமூக ஆர்வலர்களும் குத்து விளக்கேற்றி விழாவை சிறப்பித்தனர். அமிர்தகழி இளைஞர் கழக அங்கத்தவர்களும் ,பக்தர்களும் விழாவில் கலந்து கொண்டனர்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திரு. ஹாலிடின் ஹமீர் கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.