03 நாட்கள் தொடர்ந்து நடந்து முழுமை பெற்ற கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 121வது ஆண்டு நிறைவு விழா

[ ரவிப்ரியா ]
கல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 121வது ஆண்டு நிறைவு விழா, கிறிஸ்துவோடு வாழுதல் என்னும் தொனிப் பொருளில் பெரியகல்லாறு தேவாலயத்தில் மூன்று தினங்கள் தொடர்ந்து பக்திபூர்வமாக அண்மையில நடைபெற்றது.

திருமுழுக்கைத் தொடர்ந்து, ஆலய குரு அருள்திரு ஜே.ஜே.ஞானரூபன், சேகரகுரு அருட்செல்வி ஜே.சீனித்தம்பி, அருள்திரு ஏ.ஆர்.மகேந்திரன், மற்றும் போதகர்கள், சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோர் ஆராதனை நடாத்தினர்.

பிறந்தநாள் கேக் வெட்டுதல், பக்திப் பாடல் நூல் வெளியிடு, பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபை உபதலைவர் எஸ்.வரதசீலன் கௌரவிப்பு மற்றும் அதிதிகள் கௌரவிப்பு, 2016 நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தைப் பெற்ற மாணவன் பத்மகைலநாதன் கிளரின் டிலுஜன் கௌரவிப்பு   என்பன இடம்பெற்றது.

மாலையில் நடைபெற்ற கலை விழாவில் பரதம், நடனம், நாடகம், என்பன நடைபெற்றதுடன் அதிரடியாக நடனப் போட்டியும் நடைபெற்றது. ஆசிரியை ராஜினி நெறிப்படுத்தி முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த நாடகம் சிறப்பாகவும் நல்லதொரு செய்தியை நாசூக்காக சொல்வதாகவும் இயல்பாகவும் இருந்தது. கிராமிய நடனமும் அனைவரையும் கவர்ந்தது.