காணி பிரச்சினை இந்தளவு பூதாகரமாக மாற்றுவதற்கு வலய கல்விப் பொறுப்பாளரும் ஒரு காரணமாகும்.


கல்குடா கல்வி வலயத்தில் உள்ள மீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான  பிரச்சினை இந்தளவு பூதாகரமாக மாற்றுவதற்கு வலய கல்விப் பொறுப்பாளரும் ஒரு காரணமாகும்.


ஏன் என்றால் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது இப்பிரச்சினை ஒரு சின்ன விடயமாகும் இதனை தானே தீர்த்து வைப்பதாக தெரிவித்திருந்தார். அவரால் முடியாமல் போயிருந்தால் இது எனக்கு சம்பந்தப்பட்ட விடயமல்ல இதை என்னால் பார்க்க முடியாது பிரதேச செயலாளர் மட்டம் அல்லது எங்களது மட்டத்தில் பாருங்கள் என்று தெரிவித்திருக்க வேண்டும்.

இதனை பாரமாமுகமாக இருந்துள்ளீர்கள் என்பதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு இணைத்திலைவரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சருமான எம்.எஸ்எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மேற்படி பாடசாலையின் மைதானம் அமைந்துள்ள  இடம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்கும் முகமாக கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சம்பந்தப்பட்ட இருசாரருக்கும் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் சனிக்கிழமையன்று (19) சம்பந்தபட்ட இருசாராருக்கும் இடையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் பிரசன்னமாயிருந்தார்.


இவ் கூட்டத்தில் கலந்துகொண்டு விடயங்களை கையாளும்போதே பிரதி அமைச்சர் இவாறு கருத்து தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் அதிபரை பொறுத்தவரையில் குறித்த பிரசேத்தில் இடம்பெற்ற விடயத்தினை மாணவர்களைக் கொண்டு மட்டக்களப்பு வரை சென்று பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக பொம்மை கட்டி எரிக்கும் சமாச்சாரம் இடம்பெற்றுள்ளன.இவ்விடயமானது இப்பிரதேசத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் கேவலமானதொரு விடயமாகும்.ஊடகங்கள் இவ்விடயத்தில் பொறுப்பாகவும் சரியாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்விடயம் தற்போது வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் கையாளப்படுவதன் காரணத்தால் பொறுப்புடனே நாங்களும் பேச வேண்டும்.

பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு காணிதேவை என்றால் அதனை பெற்றுக்கொள்வதில் ஒரு முறையுள்ளது.பாடசாலை தேவை கருதி அதனை பெற்றுக்கொள்வதில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது.அதனை வன்முறையாக இடம்பெறுவதற்கு நீங்கள் விட்டிருக்கக் கூடாது.வெளியில் இருந்து பௌத்த துறவி அழைத்து வந்து பிரச்சினை உண்டாக்கப்பட்டுள்ளது.

அதே துறவி கடந்த காலத்தில் எமது மாவட்டத்தில்  எப்படி செயற்பட்டிருந்தார் என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்.
மக்கள் பிரச்சினைகளை பிரதேச செயலாளர் மற்றும் அரச தலைமைகளுடன் பேசி தீர்பதற்கு வசதிகள் உள்ளன.

அதனைவிட்டு மாற்றுவழிகளை தெரிவுசெய்வது பிழையான காரியமாகும்.இவை எல்லாமே அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயமாகும்.முஸ்லிம்கள் உங்கள்  தரப்பில் பிழை இருக்கிறதோ சரி இருக்கிறதோ என இரு தரப்பாரும் பேச முனையவில்லை.நீங்கள் இவ்விடயத்தினை உங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டீர்களே தவீர இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் பேசவில்லை.

எனவே நடந்தவற்றை மறந்து இருசாராரம் ஒற்றுமையாக வாழவேண்டும்.உங்களுக்குள்ளே சண்டை பிடித்து வைராக்கியத்தை ஏற்படுத்தி சென்றால் கடைசில் எம்மால் பேசி தீர்வு காண எட்டப்டட விடயங்கள் எதுவும் பலனினிறி போய்விடும்.

எனவே பொறுமையாக இருந்து நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினை முழுமையாக அமுல்படுத்த நாங்கள் தீர்மானிப்போம் என்றார்.