காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் நடாத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்'எனும் தொனிப் பொருளில் மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்       16-08-2017  நேற்று புதன்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாபெரும் இரத்ததான முகாமில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெயகொட ஆராச்சி,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்கசர் குமாரசிரி, காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா ,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சக்ர டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.அயாஷ், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மத குருமார்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார ஜெயலால், காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரீ.மகேஸ்வரன் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், ஆண், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.அயாஷினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

குறித்த  இரத்ததான முகாமில் பொது மக்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.