மக்கள் அனைவரும் சுபீட்சம் பெற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இந்திய சித்தர்களால் பாரிய வேள்வி

[ ரவிப்ரியா ]
சிலையாக இருந்த நந்தி வெள்ளையர்களின் முன்னிலையில் சாணம் போட்டுக்காட்டிய அற்புதம் நிறைந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நாட்டு மக்களின் நலன் கருதி மாபெரும் வேள்வி இந்திய சித்தர்களால் 10008 அபூர்வ காயகல்லு மூலிகைகளைக்
கொண்டு, ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வி எதிர்வரும் 17,18ந் திகதிகளில் இந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா வைரவ உபாசகர் காகபுசுண்டர் தருமலிங்களம் சுவாமிகள் தலைமையில் நடைபெறும்.

இவ் வேள்வியில் உலகிலுள்ள பல மஹா அஸ்ட பைரவ வேள்வி மூலம்  ,உபாயசகர்கள், யோகிகள். கேரள சாஸ்திர வேத விற்பனர்களான நம்பூதியினர்  சித்த முறைப்படி இணைந்து இந்த வேள்வியை நடாத்த உள்ளனர்.

17ந் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு மஹா கணபதி ஹோமமும். மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ நவக்கிரக ஹேமமும,; 18ந்திகதி காலை ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வியும் ஆரம்பமாகும்.

 மிகுந்த பொருட் செலவில் நடைபெற இருக்கும் இவ் வேள்வி மூலம் ஸ்ரீ காகபுசுண்டர் ஜீவநாடிப்படி, உலக சபீட்சத்திற்காகவும், இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும். நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களினால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும். இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து. அனைவரும் சபீட்சம் பெறுவர்.  

வேள்வியின்போது பயன்படுத்தப்படும் முதல் சித்த வனங்களில் இருந்து கொண்டுவரப்படும். 10008 மூலிகைகளின் சக்தி காற்றானது சூக்சும சக்கரங்களையெல்லாம். தூண்டி எமது ப்ரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி எமது உடலுக்கும் மனதுக்கும். மிக பெரிய தெய்வீக மாற்றத்தையும். அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை தரக் கூடிய வாய்ப்புக்களையும் வழங்கும்.

இவ் வேள்வியில் அரச உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடகளும் நடைபெற்று வருகின்றது.