யோகேஸ்வரன் எம்.பி கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரித்து செருப்பால் அடித்து ஆர்ப்பாட்டம்

(மாறன் )

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் வாழைச்சேனை முறாவோடை  பாடசாலை மைதான காணி முஸ்லீம் மக்களுடைய காணி என தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு காந்திபூங்காவின் முன்னாள் நேற்று  புதன்கிழமை (16); அவரின் கொடும்பாவி எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை முறாவோடை பிரதேசத்தில் காணி அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஈர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை முறாவேடை சக்திவித்தியாலய பாடசாலை மைதானத்தை சில முஸ்லீம்கள் அபகரித்துள்ளனர் இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற சம்பவத்தையடுத்து நேற்று  புதன்கிழமை காலை அரச ஊடகம் ஒன்றில் பத்திரிகை கண்ணோட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இப்பாடசாலை காணி 125 வருடம் பழமை வாய்தாகவும் அது முஸ்லீம்களுடைய காணி செய்தி வெளியாகியுள்ளது.

இக் கருத்து எதிர்பு தெரிவித்து சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமிழ் ஹாஜியார் யோகேஸ்வரன் ஒழிக என பலகோஷங்கள் எழுப்பியவாறு   ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு அதன் பின்னர் அவரின் கொடும்பாவிக்கு செருப்பால் அடித்து அதன் மீது தீயிட்டு எரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது முற்றிலும் தவறானது பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பாடசாலை 125 வது வருடாந்த விழாவிற்கு அதிதியாக அழைத்தபோது அவர் அங்க வந்து  இது தமிழர்களுடைய காணி இதனை பாதுகாக்கவேண்டும் என தெரிவித்துவிட்டு இப் பொழுது இதற்கு முரனாக முஸ்லீம் மக்களடையது என தெரிவிப்பது எவ்வாறு இவருக்க வாக்களித்து தமிழ் மக்கள் நாங்கள் இவர் எங்களுடைய பிரச்சனையை தீர்காது இவ்வாறு கருத்து தெரிவிப்பதை கண்டிப்பதாகவும் இக் காணி அரச காணி எனவும் இது பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிழக்க மாகாண காணி ஆணையாளர் தெரிவித்துள்ளபோது யோகேஸ்வரன் நித்திரை கொண்டுவிட்டு கற்பனையில் கனவு கண்டுவிட்டு இப்படிச் சொல்லுகின்றார் அவருக்கு சுமணரட்ணதேரருடன் தனிப்பட் விரோதங்கள் இருக்கலாம்.

மக்கள் அவரால் மடியாத விடையங்களை தேரர் மூலமாக செய் முற்படும்போது இனவாத கருத்தைகூறி வாக்குபலத்தை பெறுவதற்காகவே இவ்வாறு நடந்து கொள்ளுகின்றார் இது கண்டிக்கத்தவறு அவருடைய உண்மை நிலையை  கண்டுள்ளோம் தன்னடைய பிரதேசத்திற்குள் என்ன நடக்கின்றது என்ற தெரியாத ஒருவர்மக்கள் பிரதிநிதியாக இருக்கலாமா?  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர் தெரிவித்தனர்.