ஆரையம்பதி ‘பேசும் தெய்வம்’ ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய பக்திமிகு தீமிதிப்பு வைபவம்

(J.JAISHIKKAN)

ஆரையம்பதியில் கோவில் கொண்டு அடியவர்க்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகிமை நிறைந்த மகா சக்தி அன்னையாம் பேசும் தெய்வம் ஸ்ரீ பேச்சியம்பாளின் ஏவிளம்பி வருட ஆலய சடங்கு உற்சப்பெருவிழாவின் விஷேட தினமாம் ஆடிவெள்ளி பக்திமிகு தீமிதிப்பு வைபவமானது இன்றையதினம் (11.08.2017)ம் திகதி ஆலயத்தில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் அடியார்களின் புடைசூழ ஸ்ரீ பேச்சியம்மனின் தீமிதிப்பு வைபவம் மிகச்சிறப்புற நடந்தேறியது.

 மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு என்னும் மன்னுபுகழ் நாட்டின் தெற்கே மைல் நான்கிக்கப்பால் வளம் பொங்கும் நிலம்நிறை ஆரைநகர் என்னும் அழகு நகரிலே கோவில் கொண்டு ஆடிவெள்ளி தேடிவந்து அருளளித்துக் காத்திருக்கும் அன்னை ஸ்ரீ பேச்சியம்பாளின் ஏவிளம்பி வருட ஆலய சடங்கு உற்சப்பெருவிழா ஆடித்திங்கள் 20ம் நாள் 05.08.2017 சனிக்கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி,ஆடித்திங்கள் 27ம் நாள் (12.08.2017) சனிக்கிழமை பள்ளையச்சடங்கும் சமுத்திர தீர்த்த்தமும் இடம்பெற்று ஆலய உற்சவங்கள் அனைத்தும் இனிதே நிறைவு பெறும்.