நிலைமாற்று நீதிப்பொறிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை.


(துறையூர் தாஸன்)

இலங்கை தேசிய சமாதானப் பேரவை நிகழ்ச்சித் திட்ட அலுவலர் நிக்சன் குரூஸின் ஏற்பாட்டிலும் ஷாஹிரா இஸ்மாயிலின் இணைப்பாக்கத்திலும் ஒழுங்குசெய்யப்பட்ட சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல் தொடர்பாக,உப குழுக்களுக்கான நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை அம்பாறை ரெரெல் வதிவிடத்தில் இன்று(12) இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வில்,சட்டத்தரணி கு.ஐங்கரன் வளவாளராக கலந்து கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் பின்னர்,ஏற்ப்படுத்தப்படய வேண்டிய  சமூக ஒத்திசைவும் நல்லிணக்கமும் மற்றும் சமயங்களுக்கிடையிலான மக்களுடன் மக்கள் இணைந்து செயற்படுவதனை வலுப்படுத்தல் தொடர்பாக தனது கருத்துக்களை வளவாளர் பகிர்ந்து கொண்டார்.

முரண்பாடுகளின் காரணமாக மூன்று தசாப்தங்களாக பிளவுபட்டுள்ள மக்கள் பிரிவினர் ஒருவரையொருவர் சந்தித்து கலந்துரையாடும் வகையில் செயற்பட ஆதரவு வழங்குவதன் மூலம்,கடந்த காலங்களில் ஏற்பட்ட மாறாத கசப்புணர்வுகளை தொடர்ந்தும் நிலைபெறச் செய்யாது ஆழ்ந்த புரிந்துணர்வை பேணி வளர்த்தல்,சகிப்புத்தன்மை,சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பன்மைவாத தேசியத்துவ அடையாளத்தை வளர்க்கவும் பயனுள்ள வகையில் பெறுமானங்களை பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் ஆரோக்கியமான நல்லிணக்கதை பேணலாம் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இலங்கை நாட்டில் நடைமுறையில் உள்ள நிலைமாற்று நீதிப்பொறிமுறைகள் எவ்வாறு செயற்படுகின்றன,வேற்று நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலைமாற்று நீதிப்பொறிமுறைகள் மற்றும் நிலைமாற்று நீதிப் பொறிமுறையின் அவசியதேவை சார்ந்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உண்மையை கண்டறிதல்,இழப்பீடுகள் வழங்குதல்,பொறுப்புக் கூறல்,மீள நிகழாமை போன்றவை ஒவ்வொரு பிரச்சினைகளிலும் ஆராயப்பட வேண்டும்.

மாவட்ட ஊடகவியலாளர்கள்,சமூகத் தலைவர்கள்,உள்ளூர் அரசியல்வாதிகள்,சிவில் சமூகத்தினர்,சமூக நிறுவன தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசணைகளையும் இதன்போது பறிமாறிக் கொண்டனர்.