வரி குறைப்பு காரணமாக ஜப்பான் மோட்டார் சைக்கிள்களின் இறக்குமதி அதிகரிக்கும் வாய்ப்பு!

நிதி அமைச்சினால்  அறிவிக்கப்பட்ட வரி சீர்த்திருத்தம் காரணமாக எதிர்வரும் காலத்தில் சிறிய ரக பாரவூர்திகளின் விலை சுமார் 3 இலட்சம் ரூபாயால் குறைவடைய வாய்ப்புள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுவைக் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு  விதித்திருந்த 90 வீத வரி நீக்கப்பட்டமை காரணமாக ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள்  எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரியளவில் இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்ச்சிகே எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

சிங்கல் கெப் ரக வாகனம் மற்றும் சிறிய ரக பாரவூர்தி ஆகியவற்றின் உற்பத்தி வரி 3 இலட்சத்தினால் குறைக்க நிதி அமைச்சு இன்று தீர்மானித்தது.

விடயத்துடன் பொறுப்புடைய அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்திருந்தார்.

அதேபோல் , 150 சிசிக்கும் குறைந்த இயந்திர வலுகொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான  வரி 90 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் , இணையசேவையின் தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.