கோவில் போரதீவு ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி முருகன் கோவில் கும்பாபிஷேகம்


ஏறக்குறைய கி.பி.1107 ம் ஆண்டிலிருந்து கோவிலும், தனித்துவ கூத்து கலையும் கொண்ட கிராமம் கோவில் போரதீவு. முன்னைய காலத்தில் வெள்ளை நாவலம் பதி என்றழைக்கப்பட்ட இந்த ஊர் பின்னர் கோவில் போரதீவு என மாற்றம் பெற்றது.

போரதீவு பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

ஊருக்கு ஒரு பக்கமாய் நீண்டு நெளிந்து ஓடும் ஆறும், மற்றைய பக்கங்களில் குளங்களாலும் வயற்காணிகளாலும் சூழப்பட்டு செல்வச் செழிப்புடன் விளங்கும் ஒரு கிராமம்.


இங்கு பிள்ளையார் கோவில், முருகன் கோவில், கண்ணகி அம்மன் கோவில், நாகதம்பிரான் கோவில் என்பன அமைந்துள்ளது.

இக்கோவிலை முற்குக வம்சத்தில் வந்த குடியினத்தவர் நிர்வகிப்பது விஷேட அம்சமாகும், மேலும் இவ்வூரிலுள்ள ஸ்ரீ சித்திர வேலாயுதர் சுவாமி முருகன் கோவில் பணிக்கர் குல மக்களால் நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு தேசத்து கோவிலாகும்.

மற்றும் இக்கோவிலுக்கென பல ஏக்கர் வயல் காணிகளும் உரித்தாக காணப்படுகிறது.

மகேந்திரன், கிருபை ராஜா, தினகரன் போன்றோர் வண்ணக்கர்களாக சேவை புரிந்துள்ளனர்.

மேலும் இக்கோவிலானது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பல தடைகள் ஏற்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தினகரன், மகேந்திரன் போன்ற வண்ணக்கர் வழக்காளியை தலைமையை கொண்ட குழுவினரின் முயற்சியால் பலரின் உதவிகளை பெற்று கோவில் கும்பாபிஷேக(புனருத்தான) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் 23.08.2017 அன்று தொடங்கி 48 நாள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஆகவே அடியார்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றேகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.