இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது

இலங்கையில் இந்த சூரிய கிரகணம் தென்படாது எனவும் வட அமெரிக்காவிற்கு முழுமையாக தென்படவுள்ளதாக இலங்கை கோள்மண்டலம் அறிவித்துள்ளது.

அதேபோல, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், தென்னமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் அரைச் சூரிய கிரகணமாக தென்படவுள்ளது.

அடுத்த சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி தென்னமெரிக்க நாடுகளுக்கு மாத்திரம் தென்படவுள்ளது.

இலங்கை நேரப்படி இன்றிரவு 9.17 க்கு சூரிய கிரகணம் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பீடத்தின் ஆய்வு பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூரிய கிரகணத்தை நாசா வானிலை ஆய்வு மையத்தின் www.nasa.gov என்ற இணையத்தளத்தினூடாக நேரடியாக பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.


வட அமெரிக்காவில் இன்று தென்படவுள்ள சூரிய கிரகணத்தை நிழற்படம் எடுத்து நேரலையில் காண்பிப்பதற்கு 80,000 அடி உயரத்தில், கமராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்கவிடுவதற்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் நாசாவுடன் மான்டனா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து பணியாற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 80,000 அடி உயரத்தில் பறக்கும் 50 பலூன்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.