கால நிலை - வானிலை அவதான நிலையம்

இன்று மற்றும் நாளைய தினங்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை வீழ்ச்சியில் ஓரளவு அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இன்று அதிகாலை அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடாக (விசேடமாக ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்) ஓரளவு கடும் காற்று மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் கடும் காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தின் (விசேடமாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.