ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

இறக்குமதிக்காக அமெரிக்க டொலருக்கு உள்ள கேள்வியின் காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்றது.

இதற்கமைய கடந்த வாரத்தில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 151 ரூபாய் 19 சதமாகவும், விற்பனை பெறுமதி 154 ரூபாய் 99 சதமாகவும் அமைந்திருந்தது.

மசகு எண்ணெய் இறக்குமதிக்காக வங்கிகளால் டொலர்கள் கொள்வனவு செய்யப்படுகின்றமையே இதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக இயற்கை மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் மூலமான மின்னுற்பத்திகாக அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.