நாம் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படாத வகையில் வாழக்கூடாது – பொலிஸ்மா அதிபர் பூஜித

(க.விஜயரெத்தினம்)

நாம் வாழும்காலத்தில் பிறருக்குப் பயன்படாத வகையில் வாழக்கூடாது.  இன்னும் சிலர் தாம் வாழும் காலத்தில் பேசப்படுபவர்களாகவும், அவர்கள் இறந்த பின்னரும் மற்றவர்களின் மனத்திற்குள் இடம் பிடத்தவர்களாகவும், ஏனையவர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்களாகவும் இருப்பார்கள்
என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினால் மட்டக்களப்பு கிராங்குளத்தில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சத்திய சாயி கருணாலையத்தை ஞாயிற்றுக் கிழமை (20) திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்....

ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினரால் இப்பகுதியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்வதற்காக வேண்டி இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். மனிதர்கள் இவ்வுலகில் பிறக்கின்றோம் வாழ்க்கின்றோம் பின்னர் இறக்கின்றோம் இதுதான் உண்மை.  நாம் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படாத வகையில் வாழக்கூடாது.  இன்னும் சிலர் தாம் வாழும் காலத்தில் பேசப்படுபவர்களாகவும், பின்னர் அவர்கள் இறந்த பின்னரும் மற்றவர்களின் மனத்திற்குள் இடம் பிடத்தவர்களாகவும், ஏனையவர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர்களாகவும் இருப்பார்கள்.

 அந்த வகையில் இந்த உலகத்தில் வாழ்ந்த உத்தமர்களில் ஒருவராகத்தான் ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்கள் போற்றப்படுகின்றார். இதனால்தான் மக்கள் அவரை உள்ளங்களில் தினமும் தியானித்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அனைத்து நாடுகளிலும், ஸ்ரீ சத்திய சாயிபாபாவிற்கு வணக்கத்தைத் தெரிவித்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்றர்கள். ஸ்ரீ சத்திய சாயிபாபா செய்த சேவைகள் மற்றும் நாம் கண்டது, கேட்டவைகள் எல்லாவைகளையும், ஒரே நாளில் கூறிவிட முடியாது. எனவே நாம் அனைவரும் அவரைப்புகழ வேண்டியவர்களாகத்தான் இருக்கின்றோம்.

எனவே நாம் அனைவரும் எமது நாட்டுக்கும் மக்களுக்கும், சேவை செய்கின்ற பாக்கியசாலிகளாகத்திகழ வேண்டும்.  எனவே ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினரால் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவ சேவையைப் பெற்று பயனடைய வேண்டும். இந்த நிலையத்தை மக்கள் மிகவும் கௌரவமான முறையில் பாதுகாத்து அதிக பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தர்.

மட்டக்களப்பு கிராங்குளத்தில் ஸ்ரீ சத்திய சாயிபாபா அமைப்பினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சத்திய சாயி கருணாலயத்தில் இப்பகுதியிலுள்ள வறிய மக்களுக்கு இலவச மருத்துவ வேவைகள் இடம்பெறவுள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.